உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­குப் பின்­னர், ரணில் பத­வி­யில் இருந்து வெளி­யேற்றப் படுவார் ?

0
138

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­குப் பின்­னர், ரணில் விக்­கி­ர­ம­சிங்கா சிறிலங்காவின் தலைமை அமைச்­சர் பத­வி­யில் இருந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வெளி­யேற்­றும் என்று அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரான இரா­ஜாங்க அமைச்­சர் டிலான் பெரேரா தெரி­வித்­துள்­ளார்.
கொழும்­பில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தலை­மை­ய­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் (02) நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;
தற்­போ­தைய சூழ்­நி­லை­யில், பெப்­ர­வரி 10ஆம் திகதி தேர்­தல்­கள் முடிந்த பின்­னர், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­குப் பதி­லாக புதிய தலைமை அமைச்­சர் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட வேண்­டும்.
ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குத் தேர்­த­லில் பின்­ன­டைவு ஏற்­பட்­டால், இந்த நகர்வு சாத்­தி­ய­மா­கும். ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குப் பெரும்­பான்­மை­யான இடங்­க­ளில் வெற்றி கிடைத்­தால், இந்த நோக்­கம் சாத்­தி­யப்­ப­டாது.
வாக்­கா­ளர்­கள் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்கே வாக்­க­ளிக்க வேண்­டும். அப்­படி வாக்­க­ளித்­தால் தான், புதிய தலைமை அமைச்­சரை அரச தலை­வ­ரால் நிய­மிக்க முடி­யும்.
உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் 10ஆம் திகதி முடிந்த பின்­னர், இந்த கூட்டு அர­சில் இணைந்­தி­ருப்­பதா இல்­லையா என்­பதை, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மையக் குழு முடிவு செய்­யும்.
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால நிச்­ச­ய­மாக, பொரு­ளா­தா­ரத்தை தனது கட்­டுப்­பாட்­டில் தேர்­த­லின் பின்­னர் எடுத்­துக் கொள்­வார்.அதே­வேளை, மகிந்த ராஜ­பக்­ச­வின் குடி­யு­ரி­மை­ யைப் பறிப்­ப­தற்கு, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஒரு­போ­தும் இட­ம­ளிக்­காது.
மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ராக இருக்­கும் வரை­யில் மகிந்த ராஜ­பக்­ச­வின் விட­யத்­தில் அவ­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­ட­மாட்­டார். அரச தலை­வர் ஆணைக்­குழு விசா­ர­ணை­யின் அடிப்­ப­டை­யில் சட்­டமா அதி­ப­ரால் சிவில் மற்­றும் குற்­ற­வி­யல் சட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில் குற்­றம் சுமத்­தப்­பட்­ட­வ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யும்.
இவ்­வா­றான சந்­தர்ப்­பத்­தில் சுதந்­தி­ரக் கட்சி அந்த விட­யத்­தில் தலை­யி­டாது – என்­றார். மகிந்த ராஜ­பக்­ச­வின் குடி­யு­ரிமை பறிப்பு விட­யத்­தில் அவரை மைத்­தி­ரி­பால சிறி­சேன பாது­காத்து வரு­கின்­றார் என்று சிறீலங்கா தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சில தினங்­க­ளுக்கு முன்­னர் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here