சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பின் விடுவிப்பு !

0
200


சிறீலங்கா இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் நேற்று (29) சிறீலங்கா இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
வலி. வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் சிறீலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. பின்னர் குறித்த வைத்தியசாலையை சிறீலங்கா இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று உத்தியோக பூர்வமாக சிறீலங்கா இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை சிறீலங்கா படையினர் கையளித்துள்ளனர்.
இந்த வைத்தியசாலை அண்மைய தினம் வரையில் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தமையினால் தற்போது உடனயடியாக இது வைத்தியசாலையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. வைத்திய சாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன எனவே வைத்தியசாலையாக புனரமைக்கப்பட்ட பின்னரே மருத்துவ சேவைகளை ஆரம்பிக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here