வன்னிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் திரும்ப அனுமதிக்க போராட்டம்!

0
105

teacher_protest_1வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரை முற்றுகையிட்டு அலுவலகத்தினுள் வைத்து பூட்டி போராட்டமொன்றை ஆசிரியர்கள் திங்களிரவிரவாக முன்னெடுத்துள்ளனர்.

வன்னிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் வழங்கப்பட்ட உறுதி மொழியினை மீறி மீள யாழ்ப்பாணம் திரும்ப அனுமதிக்கப்படாத நிலையில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

காலை முதல் நல்லூரில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பதாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கல்வி அமைச்சின் செயலாளரது அழைப்பின் பேரில் சமரசப்பேச்சுக்களினை நடத்த கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் அங்கு வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் பேச்சுக்கள் வெற்றியடைந்திராத நிலையில் ஆசிரியர்கள் அலுவலகத்தை இழுத்து மூடி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

ஆண்கள் பெண்களென ஆசிரியர்கள் வழிமறித்து போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் அங்கிருந்து கல்வி அமைச்சரோ அதிகாரிகளோ வெளியேறாத வகையில் பிரதான நுழைவாயிலை வழிமறித்து போராட்டத்தினில் ஈடுபட்டனர்.

இச்செய்தி வெளியாகும் வரை போராட்டகாரர்கள் முற்றுகையை தொடர்வதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here