சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி!

0
205

சுனாமி பேரலையால் உயிர்நீத்த இலட்சக்கணக்கான மக்களை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இன்று காலை 09.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகளும், அனர்த்த முன்னெச்சரிக்கை தௌிவூட்டல் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்களிற்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பில் தௌிவூட்டும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி, புதுமுகத்துவாரம், திருச்செந்தூர், நாவலடி பகுதிகளில் இடம்பெற்றன.
அத்துடன் கல்முனை கடற்கரையிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உயிரிழந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த மக்கள் கண்ணீருடன் தங்களின் உறவிகளுக்காக பிரார்த்தனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சுனாமியால் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் 13ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனையும் சுனாமி சிறுவர் பூங்கா திறப்பு விழாவும்  இன்று ( 26.12.2017) காலை 9.00 மணிக்கு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபி முன்றலில் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மௌன பிராத்தனையுடன் ஆரம்பமான இவ் பிராத்தனை நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றுதல், மலர் அஞ்சலி செலுத்துதல், சர்வமத பிராத்தனை,  சுனாமி சிறுவர் பூங்கா திறப்பு விழா என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
இலங்கைத் தீவிலே முதன் முதலாக வவுனியா பூந்தோட்டம் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினரால் சுனாமி பேரலையின் 31ம் நாள் நினைவாக 26.01.2005ம் ஆண்டு பூந்தோட்டம் சிறுவர் பூங்காவில் சுனாமிப்பேரலை அனர்த்த நினைவுத் தூபி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம் , தியாகராஜா , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன் , கிராம சேவையாளர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், நகரசபை உத்தியோகத்தர்கள், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி. பிரதீபன், தமிழருவி சிவகுமார், கவிஞர் மாணிக்கம் ஜெகன், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுனாமியினால் உயிரிழந்த உறவினர்களின் உறவுகள், சர்வமதத்தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட சிறுவர் நினைவுப் பூங்காவினை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ. நித்தியானந்தன் திரை நீக்கம் செய்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here