சுனாமி எனும் ஆழிப்பேரலை அழிவின் 13ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்!

0
567

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 20 அடி உயரத்திற்கு உருவெடுத்த சுனாமி பேரலையில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 220 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இலங்கையில் மாத்திரம் சுமார் 35 ஆயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 5 இலட்சம் பேர்வரை இடம்பெயர்ந்தனர்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிர்  நீர்த்த  அனைத்து  உறவுகளினதும்  ஆத்மா சாந்தி   பெற  இறைவனை  பிரார்த்திக்கின்றோம்,  இதுபோ‌ன்ற  ஒரு  அனர்த்தம்  இனிமேலும்  நடைபெறாது இருக்க எப்போதும்  இறைவனை  பிரார்த்திப்போம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here