மட்டக்களப்பில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுமி பலி!

0
482

மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத் ஐனி என்ற 7 வயது சிறுமியே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சிறுமி கடந்த 3 தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here