சடலம் வருமென காத்திருந்தவர்களுக்கு, கிடைத்த இன்ப அதிர்ச்சி!

0
147

மன்னார் பேசாலை பகுதியில் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி 10 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி சக மீனவர்களுடன் மீன் பிடிப்பதற்கான சென்றுள்ளார்.

இதன்போது கடல் கொந்தளிப்பு காரணமாக படகு கவிழ்ந்ததுடன் அதில் பயணித்த மீனவரகள் நால்வரும் நீரில் மூழ்கினர்.

நீரில் மூழ்கிய மூவர் நீந்தி மன்னார் பேசாலை கடற்கரையை வந்தடைந்ததாகவும் ஒருவரின் நிலை குறித்து தெரியாமலும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

அந்தோனி மரியதாஸ் என்ற 37 வயதுடைய குடும்பஸ்த்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், அவரின் உறவினர்கள் பேசாலை கடற்பரப்பில் மரியதாஸின் சடலம் மிதந்து கரை வந்து சேரும் என காத்திருந்தனர்.

இவ்வாறு சுமார் 10 தினங்கள் கடந்த நிலையில், நேற்றைய தினம் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

அந்தோனி மரியதாஸ் என்பவர் இராமேஸ்வரம் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு கவிழ்ந்ததுடன் அந்தோனி மரியதாஸ் திசைமாறி நீந்தி கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த இரோமஸ்வர மீனவர்கள் அவரை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு இந்தியா சென்றுள்ளனர்.

இதன்பின்னர் அவர் இராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு காவல் துறையினரால் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here