தமிழர் தாயகத்தில் இளைஞர்களிடையே பரிமாறும் குறுஞ்செய்திகள் புலனாய்வுப் பிரிவினரால் வேவு பார்ப்பு!

0
228

text-messagingவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களுக்கு இடையில் பரிமாற்றப்படும் குறுஞ்செய்திகளையும் சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினர் வேவு பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசிகளை ஒற்று கேட்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு இவ்வாறு வேவு பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி குறுஞ்செய்தியில் சந்தேகத்துக்குரிய வார்த்தைகள் பகிரப்படும் போது, அந்த செய்தி நேரடியாக புலனாய்பு பிரிவினருக்கு அறியப்படுத்தப்படும்.

பின்னர் அந்த செய்திகளின் தன்மை அடிப்படையில் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுப்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த மாவீரர் நாள் அன்று வாழ்த்து செய்தியை அனுப்பிய ஒருவரும், அனுப்பப்பட்ட ஒருவரும் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here