தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வடக்கில் அனந்திகா உதயகுமார் முதலிடம்!

0
239

வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கில் உள்ள பாடசாலை மாணவர்களின் முன்னணி தர நிலைகள் கணிப்பிடப்படுள்ளன.

வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் அதிகளவிலான மாண வர்கள் கூடிய சித்தியையும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.

இதன் அடிப்படையில் சென்.ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று வடக்கு மாகாணத்திலும், யாழ்.மாவட்டத்திலும் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மன்னார் மாவட்டத் தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் குபேரகுமார் நயோலன் அபிசேக் 191 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் வித்தியால மாணவர்களான உதய ராச அவிர்சாஜினி மற்றும் ஜெயக்குமார் லெவீந் ஆகிய இருவரும் 190 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார்கள்.

முல் லைத்தீவில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்ரமணிய வித்தியாசாலை மாணவியான மகேந்திரன் ஹர்சனா 188 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கிளிநொச்சியில் கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாஸ் கரன் பார்த்தீபன் 188 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதவேளை அகில இலங்கை ரீதியில் நீர்கொழும்பு மினுவாங்கொட ஹரிச்சந்திர மகா வித்தியாலய மாணவன் தினுக கிரி ஷான் குமார 198 புள்ளிகளை பெற்று முதலி டம் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை கனேமுல்லையை சேர்ந்த இந்துமினி ஜயரத்ன மற்றும் துல்கிரியவை சேர்ந்த சஞ்சனா நயனஜித் ஆகியோர் 197 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

வெட்டுப்புள்ளிகளாக யாழ்ப்பாண மாவ ட்டத்திற்கு 155, கிளிநொச்சி மாவட்டத்திற்கு 154,   மன்னார் மாவட்டத்திற்கு 153, வவுனியா மாவட்டத்திற்கு 154, முல்லைத்தீவு மாவட்ட த்திற்கு 154 உம் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள்திருத்தங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சைக்கு 3 இலட்ச த்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றி யிருந்தனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here