இலங்கை வருகிறார் ஐ. நா.விசேடநிபுணர் பப்புலோ டி கிரீப் !

0
592


பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்­கையின் நேர்மைத் தன்­மையை ஐக்­கிய நாடுகள் சபை எதிர் ­பார்க்­கின்­றது. அந்த வகையில் இறு­திக்­கட்டப் போர் மற்றும் அதற்கு பின் ­ன­ரான நிலை­மைகள் உள்­ளிட்ட இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மதிப்­பீடு செய் ­வது இலங்கை விஜ­யத்தின் நோக்­க­மாக அமைந்­துள்­ளது என ஐக்­கிய நாடுகள் சபையின் விஷேட நிபுணர் பப்­புலோ டி கிரீப் தெரி­வித்­துள்ளார்.
இலங்கை விஜயம் தொடர்­பான முழு­மை­யான அறிக்கை ஐக்­கிய நாடு கள் மனித உரி­மைகள் பேர­வையின் 38 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்க உள்ளேன். எனவே ,இந்த விஜயம் முக்­கி­ய­மா­ன­தா­கவே அமை­கின்­றது எனவும் அவர் ; மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.
இறு­திக்­கட்ட போர் மற்றும் அதற்கு பின்­ன­ரான நிலை­மைகள் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் மதிப்­பீடு செய்­வ­தற்­காக ஐக் ­கிய நாடுகள் சபையின் விஷேட நிபுணர் பப்­புலோ டி கிரீப் செவ்­வாய்க்­கி­ழமை இலங்கை கின்றார்.
உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை செல்லும் ஐக்­கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான விஷேட நிபுணர் பப்­புலோ டி கிரீப் எதிர்­வரும் 23 ஆம்­தி­கதி வரை இலங்கையில் தங்­கி­யி­ருப்பார்.
இவர் தங்கி இருக்கும் காலத்தில் சிறீலங்கா அர­சாங்­கத்தின் மத்­திய , மாகாண மட்ட அதி ­கா ரிகள் , மக்கள் பிர­தி­நி­திகள், நீதித்­து­றை­யினர் இரா­ணுவ தலைமை அதி­கா­ரிகள் , மதத்­த­லை வர்கள், அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள், மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் பிர­தி­நி­திகள், சிவில் சமூக பிர­தி­நி­திகள், பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் உள்­நாட்டில் உள்ள சர்­வ­தேச சமூ­கத்­தினர் என பல­த­ரப்­பட்­ட­வர்­களை சந்­தித்து பேச்­சுக்­களை நடத்த உள்ளார் என்றும்.
வடக்கு மற்றும் கிழக்கு உட்­பட பல பகு­தி­க­ளுக்கும் விஜயம் செய்து மதிப் பீட்டு நட­வ­டிக்­கை ­களில் ஈடு­பட உள்ளார் என்றும் . போரின் பின்­ன­ரான முன்­னேற்­றங்கள் மற்றும் வழங் ­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­களின் முன்­னேற்­றங்கள் என பரந்தளவில் விடயதானங்களை ஆராயவுள்ளதாக ஐ. நா.விஷேடநிபுணர்பப்புலோ டி கிரீப் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here