வடக்கின் சுற்றுலாத் துறை வெளியாரால் அபகரிப்பு! – முதலமைச்சர் விக்­னேஸ்­வ­ரன்

0
362

வடக்கு மாகாணத்தின் சுற்­றுலா நட­வ­டிக்­கை­கள், சுற்று லாத்துறை­­யுடன் தொடர்பில்லாக பாது­காப்புத் தரப்­புக்­கள் மற்றும் வெளி­யில் இருந்து வந்­துள்ள தனி­யார் எனப் பல­ரின் கைக­ளில் இப்­போது தவழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. இத­னால் எமது சுற்­றுலா வரு­மா­னங்­கள் குறிப்­பிட்ட சில­ரின் கைக­ளுக்கு அல்­லது வேறு பிரி­வி ­னருக்கு மேல­திக வரு­மா­ன­மா­கப் போய்ச் சேரும் நிலை யே காணப்­ப­டு­கின்­றது என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

உலக சுற்­றுலா தினத்தை முன்­னிட்டு யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற வடக்கு மா­காண சபை­யின் சுற்­றுலா மா­நாடு குறித்து முதல்வர் அனுப்­பி­ வைத்த அறிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்­ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது, சுற்­று­லாப் பய­ணி­களை மிக­வும் கவ­ரக் கூடிய மணற்­பாங்­கான பல கடற் க­ரை­கள், சுற்­றுலா மையங்­கள் கவ­னிப்­பார் அற்று புதர் மண்­டிக் கிடக்­கின்­றன. சுற்­று­லாத் துறையை முறை­யா­கச் சீர­மைத்து சுற்­று­லாப் பய­ணி­க­ளைக் கவ­ரக் கூடிய மீள் கட்­டு­மா­னங்­க­ளு­டன் சுற்­றுலா மையங்­களை மீள் பொலி­வு­றச் செய்­வ­தன் மூலம் வடக்கு மாகா­ணத்­தின் சுற்­று­லாத்­துறை வரு­மா­னத்தை உயர்த்­து­வ­து­டன் அத­னோ­டி­ணைந்த உள்­ளூர் உற்­பத்­தி­யா­ளர்­க­ளின் உற்­பத்­தி­க­ளுக்­கான சந்தை வாய்ப்­புக்­களை அதி­க­ரிக்­கச் செய்­ய­லாம்.

உப தயா­ரிப்­புக்­க­ளான உணவு வகை­கள், உள்­ளூர் இனிப்பு வகை­கள் மற்­றும் வட­ப­கு­திக்கே உரித்­தான ஒடி­யல், பனாட்டு போன்ற பனை உற்­பத்­தி­கள் ஆகி­ய­வற்­றுக்கு நல்ல கிராய்க்கி ஏற்­ப­டக்கூடிய வாய்ப்­புக்­கள் உண்டு. எமது கட­லு­ண­வு­கள் அவற்­றின் சுவை­யின் நிமித்­தம் பிர­சித்தி பெற்­றுள்­ளன. வடக்கு மாகா­ண­சபை ஆரம்­பிக்­கப்­பட்ட பின்­னர் கடந்த 3 ஆண்­டு­ க­ளில் சுற்­றுலா தொடர்­பான பல வேலைத் திட்­டங்­களை அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக முன்­னெடுத்திருக்கின் றோம்.

எனி­னும் இத் துறையை சீராக முறை­யான தந்­தி­ரோ­பா­யத் திட்­டங்­க­ளு­டன் முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு நிதிப் பற்­றாக்­குறை ஒரு பெரும் பிரச்சி­னை­ யாக எம்­மி­டையே காணப்­ப­டு­கின்­றது.

எமது பிராந்­தி­யத்­தில் இருக்­கும் மர­பு­ரி­மைப் பொருள்கள் பல சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றன. கோயிற் சிலை­கள் காணா­மல் போவதை வெறும் களவு என்று கொள்ள முடி­யா­தி­ருக்­கின்­றது.இச் சிலை­கள் கடத்­தப்­பட்டு பல கோடி ரூபாய்­க­ளுக்­குக் கள­வாக விற்­கப்­பட்டு வரு­கின்­றன. எனவே எமது கோயில் சொத்­துக்­கள், சிலை­கள், மர­பு­ரி­மைப் பொருள்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டும். இதற்­கான சட்ட திட்­டங்­களை இயற்றி வரு­கின்­றோம்.

பலாலி விமா­னத் தளம், காங்­கே­சன்­துறை கடற்­ப­டைத்­த­ளம் ஆகி­யன சுற்­று­லா­வின் பொருட்டு சீர­மைக்­கப்­பட்டு அத னூடாக வான், கடல் வழிப் போக்­கு­வ­ரத்­து திறக்­கப்­பட வேண்­டிய அவ­சி­யத்தை அறிந்து அது சம்­பந்­த­மா­க­வும் நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கின்­றோம்.

கொழும்பு அர­சின் உத­வி­யு­டன் எமக்­குத் தெரி­யா­மல் சுற்­றுலா மையங்­களை அமைக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மக்­கள் அவ­தா­ன­மாக இருத்­தல் அவ­சி­யம். எனவேதான் எமது பகு­தி­க­ளின் பாரம்­ப­ரி­யத்துக்கும் சூழ­லுக்­கும் கலை கலா­சா­ரத்துக்கும் ஏற்­ற­வாறு புதிய சுற்­று­லாக் கலாசா­ரம் ஒன்றை உரு­வாக்க வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது. இதற்கு ஐக்­கிய நாடு­க­ளின் நிலை­யான அபி­வி­ருத்­திக்­கான நோக்­கு­கள் பற்­றிய ஆவ­ணம் உறு­து­ணை­யாக நிற்­கு­மென நம்­பு­கின்­றோம் என்­றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here