உரிய பதி­லைத் தரும் வரை, எமது போராட்­டத்­தைக் கைவி­டப் போவ­தில்லை

0
220

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­கா­ரத்­தில் மைத்திரி  அரசு உரிய பதி­லைத் தரும் வரை, எமது போராட்­டத்­தைக் கைவி­டப் போவ­தில்லை. எத்­தனை நாள்­கள் வீதி­யில் காத்­தி­ருந்­தா­லும், பன்­னா­டு­க­ளின் அழுத்­தத்­து­டன் மைத்­திரி அரசு எமக்­குத் தீர்­வைப் பெற்­றுத் தரும் என்று எதிர்­பார்க்­கின்­றோம்.
இவ்­வாறு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரும் உற­வி­னர்­கள் கூட்­டா­கத் தெரி­வித்­த­னர்.வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­ரங்­களை வெளிப்­ப­டுத்­தக் கோரி, அவர்­க­ளின் உற­வி­னர்­கள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.
வீதி­யோ­ரங்­க­ளில் கூடாரங்­களை அமைத்து மழை, வெயில் பாராது அவர்­க­ளது போராட்­டம் நேற்­றும் தொடர்ந்­தது. வடக்கு மாகா­ணத்­தில் கிளி­நொச்சி, யாழ்ப்­பா­ணம், முல்­லைத்­தீவு, வவு­னியா மாவட்­டங்­க­ளி­லும், கிழக்கு மாகா­ணத்­தில் திரு­கோ­ண­ மலை மாவட்­டத்­தி­லும் உற­வு­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.
அவர்­கள் போராட்­டத்தை ஆரம்­பித்து 6 மாதங்­க­ளைக் கடந்­துள்­ளது. இது­வரை போராட்­டத்­துக்­கான சரி­யான தீர்வு எவ­ரா­லும் வழங்­கப்­ப­ட­வில்லை. ‘‘ஐ.நா. பிர­தி­நி­தி­கள் உட்­பட அர­சி­யல்­வா­தி­க­ளும் நலம் விசா­ரித்து விட்­டுச் செல்­கின்­ற­னர்.
எமது பிள்­ளை­கள் எங்கே என்ற விவ­ரத்தை உரி­ய­வ­ரி­டம் கேட்­கத் தயங்­கு­கின்­ற­னர். எம்­மால் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பிள்­ளை­களை இழந்து இன்று வீதி­யில் நிற்­கின்­றோம். நிம்­ம­தி­யற்ற வாழ்க்கை வாழ்­கின்­றோம்.
இன்­னும் போராட்ட நாள்­கள் நீடித்­தா­லும், கோரிக்கை நிறை­வே­றும் வரை போராட்­டத்­தைக் கைவி­டப் போவ­தில்லை. பன்­னா­டு­க­ளின் அழுத்­தத்­து­டன் அரசு எமக்­குத் தீர்வு தரும் என்று எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றோம்” என்று காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here