பிரான்சில் தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு ஆரம்பம்!

0
466

இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக நீர் ஆகாரமின்றி பன்னிருநாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வின் ஆரம்பமாக நிகழ்வாக பரிசின் புறநாகர் பகுதியான ஆர்ஜன்தை பகுதியில் தியாகதீபம் திலீபனின் நினைவு தூபி அமைந்துள்ள இடத்தில் இன்று (15.09.2017)காலை 10.00 மணிக்கு வணக்க நிகழ்வு இடம் பெற்றது.  

தியாக தீபம் திலீபன் தியாக மரணமடைந்த 26.09.2017 வரை தினமும் காலை 10.00 மணிக்கு நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் வணக்க நிகழ்வு இடம் பெறும். இறுதி நாளான 26.09.2017 அன்று காலை 10.00 மணி தொடக்கம் மாலை 17.00 மணிவரை அடையாள உண்ணா நோன்பு இடம் பெறும்.
PARC DU CERISIER, RUE DES ALLOBROGES, 95100 ARGENTEUIL.
(Gare val d’Argenteuil இல் இருந்து பேருந்து 08,164 இல் தரிப்பிடம் Collège Claude Monet)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here