பிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டி 2017 !

0
844

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப்போட்டி 2017 நேற்று (10.09.2017) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு château de vincennes பகுதியில் காலை 09 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக இம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 1988 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவடைந்த கப்டன் பரா மற்றும் 1990 ஆம் ஆண்டு புலோப்பளையில் இந்திய இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடிமோதலில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் பக்கி ஆகியோரின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கிருபா அவர்கள் போட்டியில் பங்குபற்றும் அணிகளை வரவேற்று போட்டிகளை ஆரம்பித்துவைத்தார்.
தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
20 துடுப்பெடுத்தாட்ட அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.

1ஆம் இடம் : பி.எஸ்.கே. விளையாட்டுக் கழகம்
2ஆம் இடம் : சென் ஜோசெப் விளையாட்டுக் கழகம்
3ஆம் இடம் : அரியாலை ஐக்கிய கழகம் A

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here