எமது மக்­க­ளுக்­கான தீர்வு வடி­வத்தை சம்­பந்தன் ஆளும் தரப்­புக்கோ சர்­வ­தே­சத்­திற்கோ வழங்­க­வில்லை!

0
209

எமது மக்­களின் இறையாண்­மையின் அடிப் ப­டையில் உள்­ளக சுய நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்கள் சரித்­திர ரீதி­யாக  வாழ்ந்­து­வந்த பிர­தே­சங்­களில் எமக்கு போதி­ய­ளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்­பதை தமிழ்த்­தே­சியக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தின் போது ஆளும் தரப்­பி­ன­ரி­டத்தில் நேர­டி  யாக முன்­வைத்­தாரா? என ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ்  பிரே­மச்­சந்­திரன் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினை மையப்­ப­டுத்தி தீர்­வுத்­திட்டம் ஒன்று தமிழ்த்­தே­சியக்­கூட்­ட­மைப்­பிடம்
எழுத்­து­வ­டிவில் இல்­லாத நிலையில் சர்­வ­தே­சத்­திடம் எமக்­கான
தீர்வை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு எவ்­வாறு கேள்வி எழுப்ப முடியும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் புதிய அர­சியல் அமைப்புத் தொடர்­பான தெளி­வு­ப­டுத்தல் கூட்டம் “ஓர் அர­சியல் தீர்வை எதிர்­கொள்ளல்” எனும் தலைப்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதன்­போது ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்­புக்குள் சமஷ்டி சாத்­தி­யமா? புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒற்­றை­யாட்சி சமஷ்டி என்ற பதங்கள் தாங்கி வெ ளிப்­ப­டை­யாக இனங்­காட்­டப்­பட வேண்­டுமா? எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் பதி­லு­ரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
இலங்­கையில் புதிய அர­சியல் சாசனம் ஒன்றின் உரு­வாக்கம் ஒன்று நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த அர­சியல் சாசனம் என்­பது வருமா வராதா என்ற கேள்வி நில­விக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த அர­சியல் சாச­னத்­தி­னு­டைய இடைக்­கால அறிக்கை இந்த வாரம் அடுத்த வாரம் பத்து நாட்­க­ளுக்குள் வரலாம் என்று கூறப்­ப­டு­கின்­றது. கடந்த டிசம்பர் மாதம் பத்தாம் ஆம் திகதி தாக்கல் செய்­யப்­ப­ட­வேண்­டிய அறிக்கை இது வரை தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. இலங்­கையில் இருக்­கின்ற அர­சியல் சாசனம் என்­பது ஒற்­றை­யாட்சி முறை­யைக்­கொண்ட யாப்­பாக இருக்­கின்­றது.
அர­சியல் சாச­னத்தின் இரண்­டா­வது பிரிவு இலங்கை ஒற்­றை­யாட்சி நாடு என்று மிகத் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அது மட்­டு­மன்றி இலங்­கையின் அர­சியல் சாச­னத்தின் 76 ஆவது பிரிவின் முத­லா­வது சரத்தின் ஊடாக சட்டம் இயற்றும் அதி­காரம் என்­பது பாரா­ளு­மன்­றத்­திற்கு மாத்­தி­ரமே உரித்­தா­னது. அந்த சட்­ட­மி­யற்றும் அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்றம் தனக்­குக்­கீ­ழாக இருக்­கக்­கூ­டிய எந்த ஒரு சபைக்கும் அதனை வழங்­க­மு­டி­யாது என்று கூறு­கின்­றது. என்­னு­டைய அறி­வுக்கு எட்­டி­ய­வ­கையில் இலங்கை ஒரு ஒற்­றை­யாட்சி நாடு என்று அர­சியல் அமைப்பு தெளி­வா­கவே கூறி­யுள்­ளது.
புதிய அர­சியல் சாசனம் எவ்­வாறு இருக்­கப்­போ­கின்­றது என்­ப­துதான் தற்­போ­தைய கேள்­வி­யா­க­வுள்­ளது. தந்தை செல்வா காலத்தில் இருந்து தற்­போது வரை இருக்­கக்­கூ­டிய அர­சியல் கட்சித் தலை­வர்கள் வரையில் தமிழ்த்­தே­சிக்­கூட்­ட­மைப்­பி­னு­டைய இறு­தி­யாக வெளி­யி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்ட விட­யங்கள் என்­ன­வென்று பார்த்தால் வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்டும், அது தமி­ழர்­களின் தாய­க­மாக இருக்­கின்­றது. அதேபோல் தமிழ் மக்­க­ளு­டைய சுய நிர்­ணய உரிமை என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும், தமிழ் மக்­க­ளு­டைய இறை­யாண்மை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும், அந்த அடிப்­ப­டையில் தமி­ழர்­க­ளுக்கு வடக்கு கிழக்கில் சுயாட்சி உரு­வாக்­கப்­பட்டு அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்றே கூறப்­பட்டு வந்­துள்­ளது.
ஆகவே இந்த விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட வேண்­டு­மானால் அந்த அர­சியல் சாசனம் என்­பது தல­குத்­துக்­க­ர­ண­மாக மாற்­றப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. தற்­போது ஒற்­றை­யாட்சி அரசு என்றே நாட்டின் தன்மை அர­சியல் சாச­னத்தில் எழு­தப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னி­யாவின் அர­சியல் சாச­னத்­தினை பொறுத்­த­வ­ரையில் ஒற்­றை­யாட்சி என்று எழு­தப்­ப­டாத அர­சியல் சாச­ன­மாகும். அங்­கி­ருக்­கக்­கூ­டிய ஸ்கொட்­லாந்­திற்கோ அல்­லது வேல்ஸ்க்கோ உரித்­தான அதி­கா­ரங்கள் சமஷ்­டிக்கும் மேல­தி­க­மான அதி­கா­ரங்­க­ளா­கவே பகி­ரப்­பட்­டுள்­ளன. ஆனால் இலங்கை அர­சாங்கம் 1972 ஆம் ஆண்டு தன்னை ஒற்­றை­யாட்சி அரசு என அர­சியல் சாச­னத்­தி­னூ­டாக திட்­ட­வட்­ட­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ்­வா­றான சூழலில் தமிழ் மக்­க­ளு­டைய தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை உள்­ள­டக்கும் வகையில் இந்த அர­சியல் சாசனம் இருக்­க­வேண்­டு­மானால் இந்த அர­சியல் சாச­னத்தில் பாரிய பல மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.
கடந்த இரண்டு நாட்­க­ளுக்கு முன்­பாக யாழ்.பொது நூல­கத்தில் நடை­பெற்ற அமிர்­த­லிங்­கத்தின் 90 வது சிரார்த்த தினத்தில் தமிழ்த்­தே­சிக்­கூட்­ட­மைப்­பி­னு­டைய தலைவர் இரா.சம்­பந்தன் உரை­யாற்­றும்­போது எமது மக்­களின் இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் எமது மக்­களின் உள்­ளக சுய நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்­து­வந்த பிர­தே­சங்­களில் எமக்கு போதி­ய­ளவு சுயாட்சி கிடைக்க வேண்டும். இவ்­வாறு எமது கோரிக்­கை­களை மிகத்­தெ­ளி­வாக உறு­தி­யாக சர்­வ­தே­சத்­திடம் விளக்­கிக்­கூ­றி­யுள்ளோம் என கூறி­யுள்ளார்.
சர்­வ­தே­சத்­திடம் விளக்­கிக்­கூ­றி­யுள்ளோம் என்றால் இலங்கை அர­சாங்­கத்­திடம் அவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக உறு­தி­யா­கவும் தெளி­வா­கவும் கூறப்­பட்­டதா? புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திற்கு முன்­பா­கவோ அல்­லது அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­டு­கின்ற கால­கட்­டத்­தி­லேயோ மேற்­கு­றித்த உறு­தி­யான நிலைப்­பாடு தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டதா?
வடக்கு கிழக்கு இணைப்பைப் பொறுத்­த­வ­ரையில் என்­ன­வெனில் எங்­க­ளுடன் அது பற்றி யாரும் பேச­வில்லை என்றே ஜனா­தி­பதி பிர­தமர் ஆகியோர் தெ ளிவாக கூறு­கின்­றனர். இதேபோல் சமஷ்டி அதி­காரம் பற்­றிப்­பே­சும்­போதும் ஒற்­றை­யாட்­சியை தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது என்றே கூறு­கின்­றனர். இங்கு உள்ள முரண்­பா­டு­களைப் பார்க்­கும்­போது இவை அனைத்தும் இடைக்­கால அறிக்­கையில் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னவா என்­ப­துதான் பிர­தான கேள்­வி­யா­க­வுள்­ளது.
வடக்­கு­மா­காண சபை, தமிழ் மக்கள் பேரவை, ஒரு அர­சியல் சாச­னத்­திற்­காக ஒரு தீர்­வுத்­திட்­டத்தை முன்­மொ­ழிந்­தி­ருக்­கின்­றன. இத்­த­கைய தீர்­வுத்­திட்­டத்தை அர­சியல் அமைப்­புச்­சபை உள்­வாங்­கி­யி­ருக்­கின்­றதா? இது தொடர்பில் ஆலோ­சித்து இருக்­கின்­றதா? இவை அர­சியல் சாச­னத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்று பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றதா? என்று பார்த்தால் இவை எவையும் நடை­பெ­ற­வில்லை.
வடக்­கு­மா­காண சபை என்­பது ஒட்­டு­மொத்த வடக்­கு­மா­காண மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு அமைப்­பாகும். அந்த வடக்­கு­மா­காண சபையில் தமிழ்த்­தே­சிக்­கூட்­ட­மைப்­பிற்கு அப்பால் எதிர்க்­கட்சித் தலைவர் உட்­பட இன்னும் பல எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் இணைந்து ஏக­ம­ன­தாக ஒரு தீர்­வுத்­திட்­டத்தை தயா­ரிக்­கின்­ற­போது அதற்கு நாங்­களே செவி­சாய்க்­க­வில்லை என்றால் அதனை நாங்­களே ஆய்­வுக்­குட்­ப­டுத்­த­வில்லை என்றால் அர­சாங்கம் ஆய்­வுக்­குட்­ப­டுத்­துமா என்­பது தான் சாதா­ர­ண­மான கேள்­வி­யா­கின்­றது.
ஆகவே நாங்கள் தேர்தல் விஞ்­ஞா­பனம் ஒன்றை முன்­வைத்து தமிழ் மக்­க­ளு­டைய அடிப்­படைத் தேவை­களை முன்­வைத்து அதற்­கான ஆணை­களைப் பெற்று அதற்கு மேலாக மாகாண தீர்­வுத்­திட்­டங்­களை இயற்றி அதனை பூர்த்தி செய்த பின்னர் இவை எவையும் தொடர்பில் அர­சாங்­கத்­துடன் எவ்­வி­த­மாக பேச்­சு­வார்த்­தை­களும் நடை­பெ­ற­வில்லை. அவை புதிய அர­சியல் சாச­னத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்றால் அத்­த­கை­ய­தொரு புதிய அர­சியல் சாச­னத்தைப் பற்றி நாங்கள் எவ்­வாறு பேச­மு­டியும். எங்­க­ளுக்கு அமை­தி­யாக இருங்கள் குழப்­பா­தீர்கள் என்று கூறப்­ப­டு­கின்­றதே தவிர குறித்த விட­யங்கள் தொடர்­பாக அர­சாங்­கத்­துடன் பேசப்­பட்­டதா? இல்­லையா என்­பது குறித்து சொல்­லப்­ப­டு­வ­தில்லை.
உண்­மை­யான விடயம் என்­ன­வெனில் யுத்தம் முடிந்த பிற்­பாடு அர­சாங்­கத்­துடன் உடன்­ப­டிக்கை ஒன்று செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்டும். அந்த உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் புதிய அர­சியல் சாசனம் தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்­க­வேண்டும் என்­பதே சரி­யா­னது. இப்­போது கூட அர­சாங்­கத்­துடன் அடிப்­படை பிரச்­சி­னை­களை மைய­மாக வைத்து முழு­மை­யான பேச்­சு­வார்த்தை ஒன்று நடை­பெ­ற­வேண்டும் என்று நாங்கள் கூறி­யி­ருந்தோம்.
வட கிழக்கு இணைப்பு, மத­சார்­பற்ற நாடு, சமஷ்டி முறை­யி­லான ஆட்­சித்­தன்மை என்­ப­வற்­றுடன் புதிய அர­சியல் சாசனம் கொண்­டு­வ­ரப்­ப­டுமா? இல்­லையா? அதி­கா­ரங்கள் எவ்­வாறு பகி­ரப்­படும்? என்­பது தொடர்பில் தெ ளிவாக பேசப்­ப­ட­வேண்டும். இவை தொடர்பில் எத்­த­கைய பேச்­சு­வார்த்­தை­களும் நடை­பெ­ற­வில்லை. இர­க­சி­ய­மான முறையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­ற­தா­க­வி­ருந்தால் இவர்கள் சொன்ன அனைத்தும் இப்­போது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவே ஜனா­தி­பதி பிர­த­மரால் பகி­ரங்­க­மாகக் கூறப்­ப­டு­கின்­றது. அது மட்­டு­மன்றி வடக்கு கிழக்கு இணைப்­பு­இல்லை, ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே அரசு , பௌத்­தமே முதன்­மை­யா­னது என்றே அழுத்தம் திருத்­த­மாகக் கூறப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு இருக்­கு­மாக இருந்தால் அதி­காரப் பகிர்வு என்­பது என்ன?
என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் இலங்­கையில் அதி­கா­ரப்­ப­கிர்வு என்ற விடயம் கிடை­யாது. ஒற்­றை­யாட்­சியில் இருக்­கக்­கூ­டிய அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் என்­பது மத்­தியில் இருக்­கக்­கூ­டிய அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வதும் தேவை­யேற்­படும் பட்­சத்தில் மாகா­ணத்­திற்கு இருக்­கின்ற அதி­கா­ரங்­களை மத்தி மீண்டும் பெற்­றுக்­கொள்­வ­து­மே­யாகும். அதுவே தற்­போதும் நடை­மு­றையில் இருக்­கின்ற விட­ய­மா­கின்­றது. புதிய அர­சியல் சாச­னத்தில் இவ்­வாறு விட­யங்­களில் மாற்றம் ஏற்­ப­டுமா? தொடர்ந்தும் ஒற்­றை­யாட்­சி­யாக இருக்­கின்ற பட்­சத்தில் நிச்­ச­ய­மாக அதி­கா­ரப்­ப­கிர்வு என்று சொல்­வது சாத்­தி­ய­மற்ற விட­ய­மா­கவே இருக்கும்.
தற்­போது ஏகிய ராஜ்­ஜிய என்­பது சிங்­க­ளத்தில் இருக்கும் விட­ய­மா­னது தமி­ழிலும் ஆங்­கி­லத்­திலும் வேறு­வே­று­வ­டி­வத்தில் இடம்­பெ­றலாம் என்றே கூறப்­ப­டு­கின்­றது. எவ்­வாறு இருந்­தாலும் பொருள்­கோடல் செய்­கின்ற உயர் நீதி­மன்றம் சிங்­க­ளத்தில் என்ன இருக்­கின்­றதோ அத­னைத்தான் அவர்கள் கருத்தில் கொள்­வார்கள். அந்த வகையில் பார்க்­கப்­போனால் மிகவும் ஒரு ஏமாற்­றத்­த­ன­மான முறையில் இந்த அர­சியல் சாசனம் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தா­க­வேதான் எங்­க­ளுக்கு தோன்­று­கின்­றது.
புதிய அர­சியல் சாச­னத்­திற்­கான இடைக்­கால அறிக்கை வெ ளி வந்­த­பின்னர் அது மக்கள் மத்­தியில் விவா­வ­தற்கு விடப்­படும் மக்கள் அதனை ஏற்­றுக்­கொள்­வார்­க­ளாக இல்­லையா என்­ப­தனை அறிந்து சரி­யான வடிவம் எடுக்­கப்­படும் என கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் ஆளும் தரப்­பைப்­பொ­றுத்­த­வ­ரையில் சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தை நிறு­வு­கின்ற அடிப்­ப­டை­யில்தான் கடந்த கால அர­சியல் சாச­னங்கள் இருந்­தன. இப்­போது உரு­வாக்­கு­கின்ற அர­சியல் சாச­னமும் அந்த அடிப்­ப­டை­யில்தான் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி பிர­தமர் அமைச்­சர்கள் அந்த அடிப்­ப­டை­யில்தான் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்கள்.
கடந்த பிரே­ம­தாச காலத்தில் மங்­கள முன­சிங்க தலை­மையில் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு உரு­வாக்­கப்­பட்­டது. இந்­தக்­கு­ழுவில் நானும் ஒரு உறுப்­பி­ன­ராக இருந்து அங்கு ஒரு விவாதம் ஒன்று இடம்­பெற்­றது. அதா­வது உங்­க­ளுக்கு சமஷ்டி வேண்­டுமா அல்­லது வட­கி­ழக்கு இணைப்பு வேண்­டுமா? சமஷ்டி வேண்டும் என்றால் வட­கி­ழக்கு இணைப்பைக் கைவி­டுங்கள். வட­கி­ழக்கு இணைப்பு வேண்டும் என்றால் சமஷ்­டியைக் கைவி­டுங்கள் என்று கூறப்­பட்­டது.
இத்­த­கைய நிலையில் எமக்கு இரண்­டுமே தேவை என்று இறுக்­க­மாக இருந்­த­தனால் இறு­தியில் சரி­யான முடி­வு­களை எட்­ட­மு­டி­யாது அக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் கைவி­டப்­பட்­டன. இதே­போல்தான் நாங்கள் பாரா­ளு­மன்­றத்தில் இருந்­த­போது தற்­போது பிர­த­ம­ராக இருக்­கின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளுக்கு ஏனைய மாகா­ணங்­க­ளிலும் விட அதி­க­ரித்த அதி­கார பகிர்­விற்கு தான் தயா­ராக இருக்­கின்றேன் எனக்­கூ­றினார்.
தற்­போது கேட்டால் அது அப்­போது இருந்த நிலைமை தற்­போது அவ்­வாறு இல்லை. குறிப்­பாக அப்­போது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இருந்­தார்கள். இப்­போது இல்லை. அதனால் அது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது எனக்­கூ­றினார்.
சந்­தி­ரக்­கா­வி­னு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் அர­சியல் சாசனம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது. அப்­போது பிராந்­தி­யங்­களின் கூட்டு என்­பதைக் கொண்­டு­வந்­தார்கள். இந்­தி­யாவில் எவ்­வாறு இருக்­கின்­றதோ அதேபோல் பிராந்­தி­யங்­களின் கூட்டு என்­பதை முன்­மொ­ழிந்தார். தற்­போது அம்­மு­றை­யையே நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு சந்­தி­ரிக்­கா­விடம் கேட்டால் அவரும் ரணில்­போன்றே பதில் கூறு­கின்றார்.
இதே­போல்தான் மகிந்த ராஜ­பக்­சவும் ஒரு சர்வ கட்­சிக்­கு­ழுவை நிய­மித்தார். அதுவும் தொடர்ந்து நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தின் ஆரம்­பத்தில் மகிந்த ராஜ­பக்ச உரை­யாற்­றும்­போது தமிழ் மக்கள் தங்கள் தலை­வி­தியை தாங்­களே நிர்­ண­யிக்­கக்­கூ­டிய வகையில் தங்­க­ளு­டைய தீர்­வுகள் அமை­ய­வேண்டும். இந்­தியா மற்றும் ஏனைய நாடு­க­ளு­டைய அர­சியல் சாச­னத்தைப் பாருங்கள் அதேபோல் ஒரு சாச­னத்தை உரு­வாக்­க­வேண்டும் எனக்­கூ­றினார்.
இவர்கள் அனை­வரும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இருந்த காலத்தில் இருந்த மனோ­நி­லை­யி­லி­ரு­நது தற்­போது மாற்றம் பெற்­றுள்­ளனர். தற்­போது மீண்டும் சிங்­கள பெளத்த மேலா­திக்­கத்தை நிறு­வு­வது என்ற அடிப்­ப­டை­யில்தான் புதிய அர­சியல் சாசன உரு­வாக்கம் நடை­பெ­று­கின்­றது. இவ்­வா­றான ஒரு சூழ் நிலையில் எமது அர­சியல் தலை­மைகள் எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றன என்­ப­துதான் எங்­க­ளு­டைய கேள்­வி­யா­கின்­றது.
1972 ஆம் ஆண்டு தந்தை செல்வா காலத்தில் அர­சியல் சாசனம் வந்­த­போது பகிஸ்­க­ரிக்­கப்­பட்­டது. 1978 ஆம் ஆண்டு வந்த அர­சியல் சாச­னத்­திலும் தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி பங்­கு­தா­ரர்­க­ளாக இருக்­க­வில்லை. தற்­போது உரு­வாக்­கப்­ப­டு­கின்ற அர­சியல் சாச­னத்தில் தமிழ்த்­தே­சிக்­கூட்­ட­மைப்பு ஒரு பங்­கு­தா­ரர்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றது. அது மட்­டு­மன்றி நாங்கள் இறு­தி­வரை முயற்சி செய்வோம் அந்த முயற்சி தோல்­வி­ய­டைந்தால் நாங்கள் மக்­க­ளிடம் சொல்­லுவோம் என்று கூறப்­ப­டு­கின்­றது.
உண்­மை­யி­லேயே எமது முயற்சி தோல்வி அடை­யாது முன்­னோக்கிச் செல்ல வேண்டும் என்று கரு­தி­யி­ருந்தால் அர­சாங்­கத்­துடன் திட்­ட­வட்­ட­மான ஒரு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு முடி­வுகள் எட்­டப்­பட்­டி­ருந்தால் அத்­த­கை­ய­தொரு நிலமை ஏற்­பட வாய்ப்­பில்லை. நீண்ட தூரம் சென்று சில சமயம் தோல்­வி­ய­டைந்தால் மக்­க­ளிடம் பொறுப்புச் சொல்­ல­வேண்டும் என்ற தேவையும் இருந்­தி­ருக்­காது. அர­சாங்­கத்­திடம் அடிப்­படை பிரச்­சி­னைகள் பற்றி குறிப்­பாக சமஷ்­டியைப் பற்றி வடக்கு கிழக்கு இணைப்­பைப்­பற்றி பேசி­யி­ருந்தால் அர­சியல் சாசன உரு­வாக்­கக்­கு­ழுவில் இருப்­பதா இல்­லையா என்­பதை தீர்­மா­னித்­தி­ருக்­க­மு­டியும்.
சர்­வ­தேச சமூகம் தமிழ் மக்­க­ளுடன் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் தமிழ்மக்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வு இருக்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த்தேசிக்கூட்டமைப்பால் ஓர் வடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா? எழுத்து வடிவில் அவ்வாறு ஒன்றும் இல்லை. வடக்குமாகாணசபை, தமிழ் மக்கள்பேரவை உருவாக்கிய இரண்டு விடயங்கள் தவிர எழுத்து வடிவில் வேறு எதுவும் வெ ளிநாட்டு இராஜதந்திரிக்களுக்கு வழங்கி இது தான் தமிழ்மக்களுக்கு குறைச்த பட்சமாகத் தேவை என்று சொல்லப்பட்டதா?
நாங்கள் தனி நாட்டுக்காக போராடினோம் தற்போது நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் எமக்கு இத்தகையதொரு தீர்வுத்திட்டம் தேவை என்பதை சொல்லக்கூடிய அளவிற்கு நடவடிக்கைள் கூட்டமைப்பின் தலைவரால் செய்யப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்பதே விடையாகும்.
அண்மையில் இந்தியாவில் இருந்து சுஸ்மா சுவராஜ் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெ ளியாகி இருந்தது. அதில் நாங்கள் (இந்தியா) எதிலும் தலையிடப்போவதில்லை. நீங்கள் (இலங்கை அரசாங்கம்) விரைவாக அரசியல் தீர்வுத்திட்டத்தை தயாரித்து முடிவு காணவேண்டும் எனக் கோரியுள்ளார். ஆனால் எத்தகைய விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் பேசுகின்றதா என்றால் இல்லை என்பதே விடை. நாங்கள் அவர்களுடன் (சர்வதேசத்துடன்) விடயத்தை முன்வைத்து விரிவாகப் பேசாது சர்வதேச சமூகம் எங்களுக்காக எவ்வாறு பேசும் என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் தமிழ் மக்களை எங்கு கொண்டு சென்றுவிடும் என்ற அச்ச நிலைமையைத்தான் உருவாக்கியுள்ளது. நாங்கள் நெடிய போராட்டத்திற்கு பின்னர் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்த பின்னர் எமக்கான அரசியல் தீர்வைநோக்கி போகவேண்டிய தேவை இருக்கின்றது. அதனை நாங்கள் சரியாக செயற்படுத்தப்போகின்றமோ என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here