விசாரணை அறிக்கையை பிற்போடுவதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானம்!

0
633

Geneva UN_4ஐக்­கிய நாடுகள் மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையில் எதிர்­வரும் 25 ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­படவிருந்த இலங்கை மீதான யுத்த குற்ற விசா­ரணை தொடர்­பான அறிக்­கையை செப்­டெம்பர் மாதம் வரை பிற்­போ­டு­வ­தற்கு பேரவை தீர்­மா­னித்­துள்­ளது.

மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசெய்ன் மற்றும் விசா­ர­ணைக்­கு­ழுவினர் ஆகியோர் செய்­தி­ருந்த பரிந்­து­ரை­க­ளுக்கு

அமை­வா­கவே மேற்­படி அறிக்கை சமர்ப்­பிப்பை பிற்­போ­டு­வ­தற்கு மனித உரி­மைகள் பேரவை தீர்­மா­னித்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் தலை­வ­ருக்கு கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்த ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எதிர்­வரும் மார்ச் மாதம் இலங்கை குறித்த அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வேண்டாம் என்றும் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் நடை­பெறும் செப்­டெம்பர் மாதம்­வரை அதனை ஒத்­தி­வைக்­கு­மாறும் பரிந்­துரை செய்­தி­ருந்தார்.

அது­மாத்­தி­ர­மின்றி இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தின் கார­ண­மாக இந்த கோரிக்­கையை முன்­வைப்­ப­தா­கவும். இலங்கை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட ஒத்­து­ழைப்­புக்­களும் அறிக்­கையில் புதிய தக­வல்­களை இணைத்­துக்­கொள்ள சாத­க­மாக அமையும் என்று கரு­து­வ­தா­கவும் அவர் தனது கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­வேளை, இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அனுப்பி வைத்­துள்ள கடிதம் குறித்தும் குறிப்­பிட்­டுள்ள மனித உரிமை ஆணை­யாளர், இலங்­கையின் 100 நாள் வேலைத்­திட்­டத்தில் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களை ஆராயும் செயற்­பா­டு­களும் உள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பான விசாரணை அறிக்கையை செப்டெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு பேரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here