உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் பல காணிகள் ​அரசால் சுவீகரிப்பு: அறிவித்தல் பலகைகளும் நாட்டல்!

0
123

01 (1)வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகில் உள்ள மக்களுடைய காணிகள் துறைமுக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற அறிவித்தல் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன.

இராணுவம் பிடித்து வைத்துள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று புதிய அரசாங்கத்தினால் பரப்புரைகள் செய்யப்பட்டுவரும் இந்நிலையில் புதிய காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் வலி.வடக்கு மக்களை அச்சமடைய வைத்துள்ளன.

காங்கேசன்துறை வீதியின் முடிவில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதையின் இரு மருங்கிலும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில், இக் காணியானது இலங்கை துறைமுக அதிகார சபைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தல் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன.  இவ்வாறு அறிவித்தல் பலகைகள் போடப்பட்டுள்ள காணிகளில் இராணுவ குடியிருப்பாக மாறியுள்ள பொதுமக்களுடைய வீடுகள், சிறிய ஆலயங்களும் அடங்குகின்றன.

புதிது புதிதாக வலி.வடக்கில் காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் வலி.வடக்கு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை தோற்றுவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here