வாட்டுகிறது வரட்சி – தீவகப்பகுதி மக்கள் இடம் பெயரும் அவலம்!

0
315

தீவகப் பகுதிகளில் குடிநீர் இல்லாத காரணத்தால் அப்பகுதி யில் வாழும் மக்கள் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதென பிரதேச செயலர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இப் பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கு குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடல்நீரை நன்நீராக்கும் திட்டம் தொடர்பான செயற்பட்டறையின்  அனுபவ பகிர்வு கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் யாழ்.அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நீர் பற்றாக்குறை தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ள ப்பட்ட போதே தீவக பிரதேச செயலர்கள் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தீவகத்தில் தண்ணீர் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.  இதை தீர்த்து வைக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். இந்த மாதத்துடன் அப்பகுதியில் நீர் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும். ஆகவே எந்த முறையிலாவது நீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

தீவகப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோ கிப்பதற்கு பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

இதற்கு யார் தடையாக உள்ளார்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது என தெரியவில்லை. குடி நீர்  இல்லாத காரணத்தினால் அங்கு உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் அவல நிலை ஆரம்பித்துள்ளது.

எம்மால் முடிந்த வரை நீர்விநியோகம் மேற்கொண்டு வருகிறோம் ஆனால் கால நிலை மாற்றம் இன்றி இப்படியே தொடருமாக இருந்தால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதே போன்று தீவுப்பகுதிகளில் குடிநீர் இன்மையின் தாக்கம் கால்நடைகளை பெரிதும் பாதித்துள்ளது.

மேற்கொள்ளப்பட வேண்டும் என பலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here