நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 28 ஆண்டுகள் நிறைவு!

0
328

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது வான்படை மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வு நேற்றைய தினம் மாலை தேவாலயத்தில் நடைபெற்றது.
.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி இலங்கை விமான படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசின.

அதில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 360இக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு நேற்றுடன் 22 ஆண்டுகளாகின்ற நிலை யில், இந்த நினைவு தினம் நேற்று மாலை திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் விசேட வழிபாடுகளும்; தேவாலயத்தில் ஆரம்பமாகி,  பின்னர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பாதிரிமார்கள் எனப்பலரும் கலந்து கொண்டு உயிரிழ ந்த பொதுமக்கள் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றியிருந்தனர். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

படுகொலை நடைபெற்று 22 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதற்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் நடைபெறவில்லை என இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here