யாழ். அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு; 8 உழவு இயந்திரங்கள் சிக்கின!

0
355
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த 8 உழவு இயந்திரங்களும் அவற்றின் உரிமையாளர்களும் நேற்றைய தினம் மணியந்தோட்டம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து நேற்றைய தினம் பகல் கொழும்புத்துறை மணியந்தோட்டம் பகுதியால் மணல் கடத்தலில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதில் மணல் அகழ்ந்தவர்களும் சாரதிகளும் தப்பியோடிய நிலையில் உழவு இயந்
திர உரிமையாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட மணல்களும் உழவு இயந்திர உரிமையாளர்களும் யாழ் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அரியாலைப்பகுதில் தொடர்ச்சியான முறையில் மணல் அகழப்பட்டு வருவதாக பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. எனினும் மணல் கொள்ளையர்கள் மிகவும் இலாபகமாக கடத்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையிலேயே பல நாள் அவ தானிப்புக்களையும் புலனாய்வு தகவல்களையும் வைத்து நேற்றைய தினம் அதிரடியாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here