மு.கா.வின் அழைப்பு குறித்து பரி­சீ­லிப்போம்: தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு!

0
1173

tnaகிழக்கு மாகாண சபையில் தேசிய அர­சாங்­க­மொன்றை அமைப் பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் விடுத்­துள்ள அழைப்பு குறித்து கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் பரி­சீ­லனை மேற்­கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது.

பல்­வேறு சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ராக அக்­கட்­சியின் பிர­தி­த­லை­வரும் முன்னாள் மாகாண அமைச்­ச­ரு­மான ஹாபீஸ் நஸீர் அஹமட் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­துள்ளார்.

இந்­நி­லையில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ல­யாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபையில் தேசிய அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆகி­ய­வற்­றுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

இவ் அழைப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேந்­திரன் கருத்து வௌியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

கிழக்கு மாகாண சபையில் தேசிய அர­சாங்­கதை அமைப்­ப­தற்­காக இணக்­கத்­திற்கு வரு­மாறு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸால் விடுக்­கப்­பட்ட அழைப்பை உண்­மை­யி­லேயே சிறந்த விடயம். அவ்­வி­ட­யத்தை அவர்­களின் கட்­சி­யா­னது முத­ல­மைச்சர் பத­வியை பெறு­வ­தற்கு முன்­ன­தாக சிந்­தித்­தி­ருந்தால் மிகச் சிறப்­பா­ன­தாக இருந்­தி­ருக்கும்.

நாம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அவர்­க­ளிடம் கிழக்கு மாகாண சபை தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருக்­கின்றோம். குறிப்­பாக 2012ஆம் ஆண்டு தேர்­தலில் பின்னர் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் அதனை நிரா­க­ரித்து விட்டார். அதனைத் தொடர்ந்து மத்­தியில் இடம்­பெற்ற ஆட்­சி­மாற்­றத்தை தொடர்ந்து பெரும்­பான்­மையைக் கொண்ட நாம் எமது கூட்­ட­மைப்பின் சார்பில் முத­ல­மைச்­சரை நிய­மிக்­க­வேண்டும் எனக் கோரினோம். ஆனால் அத­னையும் அவர்கள் ஏற்­றுக்­கொள்­ளாது தமக்கு முத­ல­மைச்சர் பதவி வேண்டும் எனக் கூறி சத்­தி­யப்­பி­ர­மா­ணமும் செய்து விட்­டார்கள்.

அவ்­வா­றான நிலை­யி­லேயே எமக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் கிழக்கு மரா­கா­ணத்தில் தமிழ் பேசும் இரு சமூ­கங்கள் காலங்­கா­ல­மாக ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­றன. அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறித்த அழைப்­பையும் நாம் கவ­னத்தில் கொள்வோம்.

இந்த அழைப்பு குறித்து கிழக்கு மாகாண சபையின் பதினொரு மாகாணசபை உறுப்பினர்கள்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளோம். அதன் பின்னரே எமது இறுதி முடிவை அறிவிக்கவுள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here