பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுத்தூபி திறப்புவிழா நிகழ்வு!

0
7140


பாரிசின் புறநகர்பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் பகுதியில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா விளையாட்டு மைதான முன்றலில், கடந்த புதன்கிழமை (17.05.2017) அன்று பகல் 15.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கார்ஜ் சார்சல் தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின்  பான்ட் வாத்திய அணியின் அணிவகுப்பு மரியாதையுடன் கார்ஜ்சார்சல் நகரபிதா François Pupponi அழைத்துவரப்பட்டார்.
பொதுச்சுடரினை தமிழ்சங்க தலைவர் டக்ளஸ் ஏற்றிவைத்தார்.
பிரான்சின் தேசியக்கொடியினை சார்ஜ்சல் நகரபிதா அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியினை செயற்பாட்டாளர் திரு. ரூபன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாவீரர் நினைவுக்கல்லின் திரை நீக்கத்தை நகரபிதாவும் தமிழ்ச்சங்கத்தலைவர் டக்களசும் மேற்கொண்டனர்.
ஈகச்சுடரினை கடற்கரும்புலி கப்டன் நவநீதனின் சகோதரர் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மலர்வணக்கத்தினை நகரபிதாவும், தமிழ்ச்சங்கத்தலைவர் டக்ளசும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பாலன் அவர்களும் ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து முதல் மாவீரர் லெப்டினன் சங்கரின் நினைவுப் படத்திற்கான மாலையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் திருமதி சசிரேகா, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், கார்ஜ்சார்சல் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த திரு.கணேஸ் ஆகியோர் அணிவித்தனர்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கத்தையும் சுடர்வணக்கத்தினையும்  செலுத்தினர்.
சிறப்புரை ஆற்றிய நகரபிதா நவம்பர் 27 அன்றைய நாளை கார்ஜ்சார்சல் நகரசபை தமிழர் தேசிய நாளாக பிரகடனப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் உணவு கிடைக்காத போது இலைக்கஞ்சி உட்கொண்டதை நினைவுகூரும் வகையில் இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சார்ஜ்சல் நகர சபையால் சிற்றுண்டியும் குளிர்பானமும் வழங்கப்பட்டது.
மாலை 17.00 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்று, தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டன.
(ஊடகப்பிரிவு  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here