பிரமிட் ஒன்றின் எஞ்சிய பாகங்கள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0
213

தெற்கு கெய்ரோவின் தஹ்ஷுர் அரச கல்லறையில் நிலவறைக் கூடம் மற்றும் பழங்கால எகிப்திய சித்திர எழுத்துகள் கொண்ட தடுப்பு ஆகிவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய பிரமிட்டில் அடங்கும். கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பண்டைய பொருட்கள் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்த எகிப்து தொல்பொருள் அமைச்சு மேலும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், பிரமிட்டின் அளவை கணிக்கவும் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டது.  இது 3,700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதக தெரிவிக்கப்  பட்டுள்ளது.

13ஆவது பாரோ வம்சத்தால் இந்த பிரமிட் கட்டப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. நான்காவது வம்சத்தைச் சேர்ந்த ஸ்னப்ரு மன்னர் கட்டிய எகிப்தின் முதலாவது தெளிவான கூம்பு வடிவ பிரமிட் தஹ்ஷுரிலேயே அமைந்துள்ளது.

341 அடி உயரம் கொண்ட ரெட் பிரமிட் என அழைக்கப்படும் இது 4,600 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகும்.

இந்த மன்னரே முன்னதாக 105 மீற்றர் உயரம் கொண்ட வளைவு பிரமிட்டையும் கட்டி இருந்தார். பிரமிட் கட்டுமானத்தின் பாதியில் அது 54 டிகிரியில் இருந்து 43 டிகிரியாக கோணம் மாற்றப்பட்டது.

ஸ்னப்ருவுக்கு அடுத்து வந்த அவரது குபு 138 மீற்றர் உயரம் கொண்ட பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றான கிசா பிரமிட்டை அமைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here