மாமனிதர் ரவிராஜ் படுகொலை சந்தேகநபர்கள் கைது?

0
372

கடந்த 10.11.2006 இல் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே கைதுசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாமனிதர் ரவிராஜின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதிகள் கொழும்பு மேல் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ரவிராஜின் மனைவியால் மேன்முறையீடு மீளாய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த மேன்முறையீடு மீளாய்வு மனுவில் குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்பை ஜுரிகள் தீர்மானிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை ஜுரிகள்சபை இன்றி விசாரிக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் இந்த மனுவின் மூலம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here