கேப்பாப்புலவு வடமாகாணம் முழுவதும் எதிர்வரும் 20ம் திகதி முதல் போராட்டங்கள்

0
135

 


கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் போராட்டங்கள் தொடர்பில் இன்று மாலை மாவட்டச்செயலகத்திற்குள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது
பேசி எடுக்கப்பட்ட முடிவுகளின் படி போராடும் பொதுமக்களுக்கு சாதகமான முடிவுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக வடமாகாணம் முழுவதும் பணிபகிஸ்கரிப்பு போன்ற போராட்டங்கள் தொடர இருப்பதாக அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரனிடம் மக்கள் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசுவதற்கு மாவட்டச் செயலகத்திற்குள் இடம் கேட்கப்பட்ட போது, போராட்டம் தொடர்பில் மாவட்டச்செயலகத்திற்குள் பேசுவதற்கு இடம் கொடுக்கமுடியாது என்று அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் மாவட்டச்செயலகத்திற்குள் இருந்து அரசியல் பிரதிநிதிகள் வெளியேறினார்கள். அதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மாவட்ட செயலக வாசல் படிக்கட்டில் இருந்தபடியே பணிபகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்பாக பேசலாம் என்றபடி படிக்கட்டில் அமர்ந்துகொண்டு மற்றைய உறுப்பினர்களையும் அழைத்தார்
அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா இவ்வாறான செயல் அரசாங்க அதிபரை அவமதிப்பது போலாகிவிடும் என்று கூற சரி வேறு இடம் பார்ப்போம் என்று கூறிய சிவமோகன் எம்.பி, சிலபேர் போராட்டங்களுக்கு பொறுத்தமற்றவர்கள். அவர்கள் வடை சுடுவதற்குதான் பொறுத்தமானவர்கள் என்று கூறி மாவட்டச் செயலக வளாகத்தில் கூட்டம் கூட ஒழுங்கு செய்துள்ளார்.
பின்னர் ஒன்று கூடிய மக்கள் பிரதிநிதிகள் வடமாகாணம் முழுவதும் எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here