பொறுமையின் எல்லையை கடந்து விட்டோம்-பிலக்குடியிருப்பு மக்கள் வேதனை

0
150

கடந்த 14 நாட்களாக தொடர்ந்தும் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாங்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டோம் என, முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் நாட்களில் நாங்கள் எடுக்கின்ற விபரீதமான முடிவுகளுக்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலவு பிரதேசம் விமானப் படையின் வசம் மிக நீண்ட காலமாக உள்ளது.

இந்தநிலையில், தமது பூர்வீக நிலங்களை விடுவித்து, தம்மை மீள்குடியேற்றுமாறு, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தி ருந்ததுடன், கடந்த காலங்களில் அடையாளப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

எனினும், அவர்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்தமையால், கடந்த மாதம் 31ம் திகதி முதல் அப் பகுதி மக்கள், தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள விமானப்படை முகாமிற்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தி னை ஆரம்பித்தனர்.

பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகளுடைய ஆதரவுடன் இரவு பகலாக இந் நில மீட்புப் போராட்டம் கட ந்த 14 நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கிவருபவர்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவ சிய உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவதோடு, தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்கள் உணவு களை வீதியில் வைத்தே சமைத்தும் உண்டு வருகின்றனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படாததை அடுத்து மக்கள் கடுமையான விசனத்தினை வெளி யிட்டுள்ளனர்.

எந்தத் தடைகள் வந்தாலும் எமது காணிகள் விடுவிக்கப்படும் வரைக்கும் போராட்டத்தினை நாங்கள் கைவிடப் போவதி ல்லை. அமைதியான முறையில் எமது கோரிக்கைகளை வெளிப்படுத்தி வரும் நாங்கள் பொறுமையின் எல்லையினை கடந்து விட்டோம். எமக்காக இல்லாவிட்டாலும், எமது பிள்ளைகளின் வாழ்க்கைக்காக சில முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் எமது அமைதிப் போராட்டத்தினை அரசாங்கம் தொடர்ந்தும் கண்டு கொள்ளாமல் விடுமாக இருந்தால் எமது போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். விபரீதமான முடிவுகளை எடுக்கவும் நேரிடும். தடைகளை கட ந்து படை முகாமிற்குள் செல்லும் நிலையும் ஏற்படும். இவ்வாறான முடிவுகளை எடுக்கும் நாள் மிக தொலைவில் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாங்கள் என்ன முடிவு எடுத்தாலும், அந்த முடிவுகளினால் ஏற்படும் விபரீதங்கள், பாதிப்புக்கள் அனைத்திற்கும் இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here