புதுக்குடியிருப்பு மக்கள் நாளைமுதல் உண்ணாவிரத போராட்டத்தில் !

0
173

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளையும் வீடுகளையும் இராணுவம் விடுவிக்க வேண்டுமெனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நாளை முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்றையதினம் பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம் முன்னால் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்றையதினம் பதினோராவது நாளை எட்டியுள்ளது.

புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் போராட்ட வடிவத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதாக மக்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்தார் .

இதேவேளை அனைத்து உறவுகளும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பியதால் இன்று தாம் வீதியில் நிற்பதாக தெரிவித்துள்ள மக்கள்இ தமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். 19 குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு தெரிவித்தே மக்கள் இந்த தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மக்கள் உறவினர் வீடுகள் மற்றும் வாடகை வீடுகளில் வசித்து வருவதுடன் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தபோதும் கடந்த 7 வருடங்களாக தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here