அந்நிய செலாவணி மோசடி சசிகலா மனு தள்ளுபடி

0
404


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி (ஃபெரா) வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
1990களில் வெளிநாட்டு பண பரிமாற்ற சட்டம் (ஃபெரா) வழக்கில் சசிகலா மீது 1996ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளை தாக்கல் செய்திருந்தது. சசிகலா 1996ல் கைது செய்யப்பட்டிருந்தார். சிறை சென்ற சசிகலா பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம், மூன்று வழக்குகளில் இருந்தும் சசிகலாவை விடுதலை செய்தது. இந்நிலையில் சசிகலாவை வழக்கில் இந்து விடுவித்ததை எதிர்த்து அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம். அதில், சசிகலாவை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. சசிகலா அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சசிகலா, டிடிவி தினகரன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2015ல் சசிகலா மீதான இரு ஃபெரா வழக்குகள் தள்ளுபடியானாலும் கூட மேலும் 3 வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. தள்ளுபடி செய்த 2 வழக்குகளிலும் கூட அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சசிகலாவிற்கு சிக்கல் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here