மின் பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் பிரான்ஸ்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
379

பிரான்ஸில் மின் பாற்றாக்குறையை குறைக்கும் வகையில் நாட்டு மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மின் உற்பத்தி நிலையத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இது எதிர்வரும் நாட்களில் பரவலான மின் வெட்டுக்கு வழிவகுக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதால் எதிர்வரும் ஜனவரி 19ம் திகதி முதல் மின்வெட்டு எற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நியைில், மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கையில் மக்களை ஈடுபடுத்தும் நோக்கில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் பற்றாக்குறையை தடுக்கும் வகையில் பெரிய இணைப்புகள் அடங்கிய மின்னஞ்சல்களை பலருக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும், பகல் நேரங்களில் விளக்குகள், கணினிகள் அணைத்து வைக்கும் படி வலியுறுத்தியுள்ளனர். உச்ச காலங்களில் சலவை இயந்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வேலையில் கணினி திரைகளின் பிரகாசத்தை குறைத்தும், பெரிய அளிவில் அச்சிடுவதை தவிர்த்து மின்சாரத்தை சேமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here