எமது தனித்துவம் எமக்குத் தேவை:கனேடிய அமைச்சரிடம் சி.வி. எடுத்துரைப்பு

0
697

imageஈழத்தமிழர்கள் பிரிவினையைக் கோரவில்லை. ஆனால் அவர்களது தனித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே கோருகின்றனர் என யாழ்.வந்த கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் டியோனி டம் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்களாகின்ற போதிலும் இராணுவம் வடக்கிலிருந்து வெளியேறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருந்த கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் டியோன் நேற்றைய தினம் காலை வடக்கு மாகாண முதலமைச்சரினை கைதடியிலமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் அரசியல் ரீதியான தற்போதைய நிலையென்ன என்பதை அறிந்து கொள்வதற்காக வந்திருந்தார்கள். இலங்கை இந்தளவு காலம் தமிழ் மக்களுடன் எதிர் நோக்கியது போன்று தாமும் கியூபெக் மாகாண மக்களுடன் பிரிவினைவாதம் தொடர்பிலான பிரச்சினையை எதிர்நோக்கியிருந்ததாகவும், அதனை தற்போது தீர்த்து கனடா நாடு கூடிய வலுவுடன் முன்னேறிக்கொண்டு இருப்பதாக எடுத்துக்கூறினார்.

இதே போன்றதொரு நிலையை இலங்கை அடையுமா? என என்னிடம் கேட்டார். அவ்வாறு அடைவதற்கு காணப்படும் தடைகள் எவை என்பன குறித்தும் என்னிடம் கேட்டிருந்தார். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் னர் இந்த நிலை இருந்தது. நாடுபூராகவும் தமிழ் மக்கள் ஆங்காங்கே வீடுகளை வாங்கி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள்.

எந்தவிதமான தடைகளும் இருக்கவில்லை யாரும் எங்கும் செல்லும் நிலைகாண ப்பட்டது. ஆனால் 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியதிலிருந்து அரசியல் ரீதியான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். நாட்டின் ஒருமைப்பாட்டை நாம் எதிர்க்கவில்லை.

இந்த அடிப்படையில் தான் மக்கள் தேர்ந்தெடுத்திருகின்றார்கள். எமது தேர்தல் விஞ் ஞாபனத்திலும் பிரிவினையை நாம் கோரவில்லை. நாம் பிரிவினைவாதத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் நாட்டில் எங்களுடைய தனித்துவம் பேணப்பட வேண் டும் என்ற கருத்தை எடுத்து கூறினேன். தனித்துவம் பேணுவது என கூறும் போது,

பாரம்பரியமாக எங்களுடைய மொழி, மதங்கள், கலாசாரம், வாழ்க்கை முறை இவை எல்லாம் நாட்டின் மற்றைய பாகங்களில் உள்ள ஏனைய மக்களுடைய வாழ்க்கை முறைகளில் இருந்து வேறுபட்டு காணப்படு வதனால் அவை பேணப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இதனை வெளிவிவகார அமைச்சரும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

கியூபெக் நாட்டு மக்கள் கனடாவிலிருந்து பிரியத்தேவையில்லை என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்ததை சுட்டிக்காட்டி, எங்களிடம் இவை பற்றி கேட்டால் அனுசரணைகள் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறினேன். அவரொரு வித்தியாசமான கேள்வி ஒன்றினை என்னிடம் கேட்டார். நீங்கள் ஒரு தமிழர் என்றும் இலங்கையர் என்றும் கூறுவதில் பெருமை அடைவீர்களா? என கேட் டார்.

அதற்கு நான் கூறினேன், அவ்வாறு தான் முன்னர் இருந்துள்ளோம். இலங்கையர் என்ற வகையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் என்று கூறுவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கனடா நாட்டிலுள்ள தமிழ் மக்கள் போன்று இலங்கை தமிழ் மக்கள் என்று கூறுவோம் என கூறினேன்.

ஆனால் தமிழர்களுடைய தனித்துவம் அவர்களுடைய பாரம்பரியம் எத்தனையோ வருட கால அவர்களுடைய சரித்திரம், இவை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தின் வெளியிலிருந்து மக்களை குடியேற்றுவது எல்லாம் எங்களுடைய தனித்துவத்தை தொலைப்பதற்கு ஒப்பாகும் எனக் கூறினேன். இதை கனேடிய அமைச்சர் ஏற்றுக்கொண்டார். தாம் கனடா நாட்டை சேர்ந்த வர்; என்ற வகையில் இந்த நாட்டில் அமைதி சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்கு தாம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் இரு மொழி பாண்டித்துவம் ஏற்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுப்பத ற்கு நிதி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் கனடா நாட்டில் தமிழ் பேசும் மக்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்கள் எங்கிருந்தாலும் நல்ல நிலையில் இரு க்க வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக கூறியதாக முதலமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார். (செ-4)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here