ஜேர்மனியில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!

0
429

jerman vings 4ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள அகதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பவேரியாவின் உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மான் தெரிவித்துள்ளார்.

சிரியா, ஈராக் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அகதிகளை ஏற்க தயங்குகின்றன.

இந்நிலையில் புகலிடம் கோரி விண்ணப்பித்து உள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பவேரியாவின் உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அவர்களுடைய சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட வெளியேற வேண்டும்.

தேவைப்பட்டால், இதைச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்த நான்கு தாக்குதல்களில், மூன்று அகதிகளாக வந்தவர்களால் நிகழ்த்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here