
தமிழ் மக்களது விடிவிற்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர் தாயகத்தில் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட இருக்கின்றது

அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காகத் தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வருகின்றன

அந்த வகையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முந்தினம் ( 01 /11 / 2026) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சாமிநாதன் தலைமையில் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது,
இதில் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர், நலன் விரும்பிகள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்


