முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகள்!

0
4

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் நிர்வாகக் கூட்டம், பணிக்குழுத் தலைவர் க. விஜிந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, தலைவர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்து, நிர்வாக உறுப்பினர்கள் ஏகமனதாக, க.விஜிந்தன் தொடர்ந்து தலைவராகப் பொறுப்பில் இருந்து பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். இதற்கமைய, க. விஜிந்தன் தொடர்ந்து பணிக்குழுத் தலைவராகச் செயற்பட இணக்கம் தெரிவித்தார். செயலாளராக இ.ரவீந்திரன், பொருளாளராக ஞா.யூட்சன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்குச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து துயிலும் இல்ல வளாகத்தில் சிரமதானப் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மேலும், தொடர்ச்சியான பொதுச் சிரமதானப் பணி எதிர்வரும் சனிக்கிழமை (07) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், இப்பணியில் அனைவரும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here