பிரான்சில் நுவாசிலுசெக் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று 10.05.2025 சனிக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நுவாசிலுசெக் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.நினைவுரைகளும் இடம்பெற்றன..
இதில் மாநகர முதல்வர் ஓலிவர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதுடன் தமிழ்மக்களுக்கான தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தார். இவரோடு துணை நகரபிதா மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியது டன் தமது முகநூல்களிலும் கருத்துக்களை பிரெஞ்சு மொழியில் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவாசிலுசெக் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் சசிக்குமார், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் பாலகுமாரன் மற்றும் நுவாசிலுசெக் தமிழ்ச்சோலை நிர்வாகி , உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
















