
ளிநொச்சி – கனகபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி இன்றைய தினம் வழங்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர், எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள்.

வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது என்ற அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவை கடத்தும் வகையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.