
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.