
யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வரும் அவர் , நேற்றைய தினம் வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது , தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் , இயந்திரம் வெட்டி , சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.