
யாழ்.ஈச்சமோட்டையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானை வதிவிடமாகவும் கொண்ட கடற்புலிகளின் மகளிர் படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரி ஜெயராசா மலர்விழி (குமுதினி)
அவர்கள் சிறுநீரக செயலிழப்புக் காரணமாக கடந்த 02-05-2025 அன்று. தாயகத்தில் சாவடைந்தார். அன்னார் கடற்புலிகளின் தளபதி மாறனின் அன்பு மனைவியாவார்.

இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் இறுதி வணக்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தாயகத்தில் 1992 இலிருந்து முள்ளிவாய்க்கால் வரை போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய மலர்விழி அவர்கள் 02.05.2025 அன்று சாவடைந்துள்ளார் இவரிற்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
