பாய்ந்த அனுர பதுங்கிய ரணில் கொஞ்சம் முன்னுக்கு வந்த நாமல் யாராலும் தமிழர்களிடம் வாலாட்ட முடியவில்லை!

0
12

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

எனினும், அவற்றில் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர, ஏனைய அனைத்திலும் பெரும்பான்மையை அக்கட்சி இழந்துள்ளது.

சமீபத்திய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது நாமல் ராஜபகச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனவும்,  திலித் ஜெயவீரவின் சர்வஜன பலயாவும் முன்னேற்றம் கண்டுள்ளன.

மேலும் வடக்கில்  தமிழ் கட்சிகள் முன்னிலை தமக்கான ஆசனங்களை தக்கவைத்துள்ளன.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட நாமல் தலைமையிலான கட்சி மொத்த வாக்குகளில் 9 சதவீதத்திற்கும் அதிகமாகப் பெற்றுள்ளது.

மேலும், இதுவரை அறிவிக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டை என அடைமொழியிடப்படும் கொழும்பு மாநகர சபையில் வெற்றி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேயர் பதவிக்கு பல முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் முன்னணி கட்சிகள் தேர்ந்தெடுத்த நிலையில் வெற்றி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் சென்றுள்ளதாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாநகர சபைக்கு பலத்த போட்டி உருவாகிய நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here