
தமிழ் மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை ஐ.சி.ஆர்.சி பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தடையாக இருக்கிறார்கள் என சிறிலங்கா அரசால் புனையப்பட்ட கதைகளை முற்றிலும் மறுத்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இது தொடர்பில் எழுத்துமூலமான உத்தரவாதம் ஒன்றையும் 2009 மே 4 ஆம் திகதி வழங்கினார்.
அந்த கடிதத்தில் ஐ.சி.ஆர்.சி மனிதாபிமான நடவடிக்கைகளை செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அர்ப்பணிப்புடன் கூடிய முழு ஒத்துழைப்பை வழங்குவதாக குறிப்பிட்டிருந்ததுடன் அந்த கடிதத்தை தேவையான பாதுகாப்பிற்கு உத்தரவாவாதமாக எடுத்துக்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே வேளை சிறிலங்கா அரசாங்மே அதன் படைகளை வைத்து இராணுவ சூட்சிகளை மேற்கொண்டு ஐ.சி.ஆர்.சியின் தடுக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார் . காயமடைந்த பொதுமக்களை ஏற்றுவதற்காக வந்த வாகனங்களின் மீது சிறிலங்கா இராணுவம் வீசிய செல்களினால் வாகனங்களிற்கு சேதமேற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.ஆர்.சி காயமடைந்தவர்களை ஏற்றும் போதெல்லாம் பயிற்சி செய்வது போன்று அவ்விடங்களிற்கு செறிவான செல் தாக்குதல்களை மேற்கொண்டு காயமடைந்தவர்களையும் தன்னார்வ பணியாளர்களையும் வேண்டுமென்றே அச்சுறுத்தலிற்குள்ளாக்குவதாக பா.நடேசன் குற்றம சாட்டினார் .
ஐ.சி.ஆர்.சியுடன் UN போர்ப்பகுதிகளிற்கு செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் அனுமதிப்பதாகவும் அவ்வழியே UN தரையிறங்க முடியும் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க முடியும் மக்களை பாதுகாப்பான பிரதேசங்களிற்கு மாற்ற முடியும் நிலைமைகளை கணிப்பிட முடியும் என்று சாரப்பட பான் கீ மூன் வழங்கிய கூற்றானது தந்திரமாக விடுதலைப் புலிகள் மனிதாபிமான செயற்பாடுகளிற்கு தடையாக இருக்கிறார்கள் எனும் கருத்தை முன்வைத்திருந்தது.
விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பணிப்பாளரான புலித்தேவன் அரசியல்துறைப் பொறு்பாளர் பா.நடேசன் ஐ.சி.ஆர்.சிக்கு வழங்கிய கடிதத்திள் நகலை வழங்கியதுடன் சிறிலங்கா படைகளின் தாக்குதலில் சிக்கி எரிந்த ஐ.சி.ஆர்.சியின் வாகனங்களின் படங்களையும் வெளியிட்டார்.
கடிதத்தின் நகல்
அரசியல் துறை தலைமையகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
04.05.2009.
வதிவிடப்பிரதிநிதி,
ஐ.சி.ஆர்.சி, கொழும்பு.
அன்புள்ள ஐயா,
எங்கள் அமைப்பானது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (ஐ.சி.ஆர்.சி) அதன் உறுப்பினர்கள் மனிதாபிமான பணிகளையு செய்வதற்கான ஒத்துழைப்பையும் அனுசரணையையும் முழுமையாக வழங்கும் என்பதை விடுதலைப்புலிகளின் சார்பாக நான் உறுதிப்பாட்டை வழங்குவதுடன் இக் கடிதத்தை எமது அமைப்பின் உத்தரவாதமாக எடுத்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்
ஐ.சி.ஆர்.சியின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அதன் ஆயுதப்படைகளும் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் நாம் அறிவோம் .இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இன அழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிற்காக ஐ.சி.ஆர்.சி ஆற்றியுள்ள விலைமதிப்பற்ற மகத்தான் பணிகள் அனைத்திற்கும் எங்கள் ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
பா.நடேசன்
அரசியல் துறைப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்