யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு சம்பவங்களிலும் இள வயதினரின் அகால மரணங்கள் தற்போது அதிகரித்துள்ள நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாய் இளைஞர் கம்பர்மலையில் சடலமாக மீட்பு !

கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற இளைஞரே நேற்று மாலை 6:00 மணியளவில் கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

நண்பர்களுடன் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது இறப்புக்காரணம் இதுவரை அறியப்படவில்லை , சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட
பச்சைப்புல் மோட்டை ஏரி பகுதியில்
உயிரிழந்த நிலையில் ஆண்ஒருவரின்
உடலம் இன்று(5) இனங்காணப்பட்டுள்ளது
அம்பலவன் பொக்கனை புதுமாத்தளன்
பகுதியைச் சேர்ந்த 27 அகவை உடைய றாஜசீலன் ராஜ்குமார் என்பவரே இவ்வாறு
உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது
கிராமவாசிகள் கொடுத்த தகவலுக்கு
அமைய முல்லைத்தீவு காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தை
மீட்டுள்ளார்கள் சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணை முல்லைத்தீவு
காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில்,
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கரை ஒதுங்கி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக கரை ஒதுங்கியவர் 36 வயதுடைய சக்தி கோவிலடி தும்பளை கிழக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் தர்சன் தக்சயா எனத் தெரியவருகின்றது.
கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் உயிரிழந்தவரும் இவருடைய மகனும் தும்பளையில் வசித்து வந்துள்ளனர்.
கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.