புலம் பெயர் தமிழர்கள் விமான நிலையத்தில் கைதாகும்போது எவ்வாறு தாயகம் திரும்புவர்: சுரேஷ்­ பிரே­மச்­சந்­திரன்

0
226

suresh mpவெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற தமி­ழர்­களை அச்­சு­றுத்தி பணம் பறிக்கும் சம்­ப­வங்கள் பண்­டா­ர­நா­யக்க விமான நிலை­யத்தில் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் புலம்­பெ­யர்ந்­த­வர்கள் தாரா­ள­மாக நாடு திரும்­ப­லா­மென்று அழைப்­பது அர்த்­த­மற்ற செய­லாகும் என யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

புலம்­பெயர் தமிழ் மக்கள் நாடு திரும்­பலாம் என ஜனா­தி­ப­தியும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் விடுத்த அறி­விப்பு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சுரேஷ்­ பிரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில், புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் தாரா­ள­மாக நாடு திரும்­பலாம். இங்கு முத­லீ­டு­களை சுதந்­தி­ர­மாக மேற்­கொள்­ளலாம் என ஜனா­தி­ப­தியும், புலம்­பெயர் அமைப்­புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்­யப்­ப­டு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் கூறி­யி­ருக்­கின்ற போதும் அவர்கள் அச்­ச­மின்­றியும் சுதந்­தி­ர­மா­கவும் வரு­வ­தற்­கு­ரிய உத்­த­ர­வா­தத்தை இலங்கை அர­சாங்கம் வழங்க வேண்டும்.

அண்மைக் காலத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த 10இற்கும் மேற்­பட்ட இலங்கைத் தமி­ழர்கள் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கடந்த வாரம் கன­டா­வி­லி­ருந்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவரும் தடுத்து வைக்­கப்­பட்டு நான்கு மணி நேரம் விமான நிலை­யத்தில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளனர். விசா­ர­ணையின் பின்பு அவர்கள் விடு­விக்­கப்­பட்­டாலும் தமது சொந்த ஊரான யாழ்ப்­பாணம் சென்ற சமயம் அவர்­களின் பின்னால்

புல­னாய்வு பிரி­வினர் சென்று பல இடைஞ்­சல்­களைக் கொடுத்­துள்­ளனர். இதனால் உட­ன­டி­யா­கவே அவர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்­டார்கள்.

வெளி­நா­டு­களில் வாழும் இலங்கைத் தமி­ழர்கள் இலட்­சக்­க­ணக்­கான பணத்தை செலவு செய்து தம் தாய் நாட்­டுக்கு ஆவ­லுடன் வந்தால் அவர்கள் நிந்­திக்­கப்­ப­டு­கி­றார்கள். புல­னாய்வுப் பிரி­வி­னரால் தொந்­த­ர­வுக்கு ஆளாக்­கப்­ப­டு­கி­றார்கள். விமானம் நிலையம் வரு­கின்ற

ஒவ்­வொ­ரு­வ­ரையும் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­பதும் விசா­ரிப்­பதும் கைது செய்­வதும் பணம் பறிப்­பதும் சர்­வ­சா­தா­ர­ண­மா­கவே நடை­பெ­று­கி­றது. மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற தமி­ழர்கள் கூட விமான நிலை­யத்தில் வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

எனவே இலங்­கை­ய­ர­சாங்­க­மா­னது தனது நடை­மு­றை­களை மாற்­றாமல் புலம் பெயர்ந்­த­வர்­களை வாருங்கள் அவர்கள் தாரா­ள­மாக நாடு திரும்­பலாம். புலம்­பெயர் அமைப்­புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்­யப்­படும் என்று கூறு­வ­தெல்லாம் அர்த்தம் அற்­ற­தாகும்.

இன்று வெளி­நா­டு­களில் 10 லட்­சத்­துக்கு மேற்­பட்ட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். இவர்கள் இலங்கை வரும்போது கைது செய்வதானால் எத்தனை ஆயிரம் மக்களை கைது செய்ய முடியும். எனவே தான் இலங்கை அரசாங்கமானது இவ்வகை நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து, எவரும் வரலாம் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here