முள்ளி வாய்க்காலில் குண்டு வெடிப்பு !

0
10

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன .
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பிரதேச நபர் ஒருவர் தீ வைத்தபோது அதற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருள்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.
இச் சம்பவம் நேற்று (12) இரவு இடம் பெற்றுள்ளது .
சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருகின்றன . குறிப்பிட்டனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை .
இறுதி போருக்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதியில் வெடிபொருள் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்திருந்த போதிலும் இன்னும் வெடி பொருட்கள் மீட்க படாமல் வெடிபொருள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப் பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here