பிரான்சு பாராளுமன்றத் தேர்தல் 2017 !

0
352


பிரான்சின் பாராளுமன்றத்தேர்தலின் முதல் சுற்று வாக்களிப்பு நாளை (11.06.2017) காலை 8.00 மணி தொடக்கம் இரவு 20.00 மணிவரை நடைபெற உள்ளது.
577 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்பட உள்ள இத் தேர்தலில் பிரான்சு நாடுதழுவி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 7882 பேர் போட்டியிட உள்ளனர். இவர்களில் 42 வீதமானோர் 3344 பெண்களாகும். இந்த எண்ணிக்கை 2012 தேர்தலில் போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கையைவிட இரண்டு வீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
67 ஆயிரம் வாக்குச் சாவடியில் இடம் பெற உள்ள வாக்களிப்பிற்கு பாதுகாப்புக் கடமையில் 50 ஆயிரம் காவல்த்துறையினர் கடமைமையில் ஈடுபடுத்தப்பட உள்ள அதே வேளையில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் வாக்களிக்க 47 மில்லியன் வாக்காளர் வாக்களிக்க தகுதிநிலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here