
தமிழ் மக்கள் பேரவையின் இரண்டா வது கூட்டம் நேற்று காலை ஒன்பது மணியளவில் யாழ்.பொது நூலகத்தில் இணைத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி உபகுழுவின் உறுப் பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பின ரும் வாழ்நாள் பேராசிரியருமான சி.க சிற் றம்பலம், சட்டத்தரணி என்.காண்டீபன், புளொ ட்டின் தலைவர் ரி.பரந்தாமன், ஈ.பி.ஆர். எல்.எப்.இன் தலைவரும் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச் சந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன், தமிழ்த்தேசிய மக்கள் முன் னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன் னம்பலம்,
சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளரும் சட் டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன், சட்டத்தரணி பு.புவிதரன், யாழ்.பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கே.ரி. கணேசலிங்கம், சட்டத்தரணி சேவியர் விஜயகுமார் ஆகியோர் இவ் உப குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை விட மேலும் மூன்று உறுப்பினர்கள் மேற்படி உபகுழுவில் உள்வாங்கப்பட உள்ளனர். இதில் இருவரை வடக்கு மாகாண முதலமைச்சரும் மேற்படி பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக் னேஸ்வரன் நியமிக்கவுள்ளார். நேற்று காலை ஒன்பது மணியளவில் யாழ்.பொது நூலகத்தில் ஆரம்பமாகிய கூட்டம் மதியம் பன்னிரண்டு மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புடன் நிறைவுக்கு வந்தது. தெரிவு செய்யப்பட்ட உப குழு, தமிழ் மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக் குரிய அரசியல் தீர்வு திட்டம் உள்ளிட்ட யாப்பு வரைபுகள் தொடர்பில் மக்களுடனான சந்திப்புக்களை ஏற்படுத்தி தகைமைசார் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள் வாங்கி தமது நடவடிக்கைகளை முன் னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.