சவுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் சாவு!

0
161
rajanசவுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு எருவில் பாரதிபுரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதுடைய இராஜன் என்பவர் தொழில் நிமிர்த்தம் சவுதிக்குச் சென்றுள்ள நிலையில் இன்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
சவுதியில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்து தனது குடும்பத்துடன் தங்கியிருந்து, மீண்டும் தொழில் நிமிர்த்தம் 22 நாட்களுக்கு முன்பு சவுதிக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்த நபர் பெண் குழந்தையொன்றின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here