பிரித்தானியாவில் தேசத்தின் குரல் பாலா அண்ணரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
275

தேசத்தின் குரல் பாலா அண்ணரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
நிகழ்வில் பொதுச்சுடரினை இந்திரன் ஐயா அவர்களும், ஈகைச் சுடரினை மாவீர்ர் கப்டன் அருந்ததியின் தாயார் திருமதி அசலாம்பிகை சண்முகநாதன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மலர் வணக்கத்தினையும் சுடர்வணக்கத்தினையும் செலுத்திய சம நேரத்தில் பாலா அண்ணரின் வரலாற்று ஆவணப் பதிவுகள் திரையில் காட்டப்பட்டது.
தொடர்ந்து தாயகத்தில் நீண்டகாலம் களப்பணியாற்றிய போராளி கயல்விழி அவர்கள் கவிதையை வழங்கியிருந்தார். ஊடகத்திலும் மாவீரர்நாள் நிகழ்வுகளிலும் கவியுரைத்து வரும் கவிஞர் ரேணுகா உதயகுமார் அவர்கள் கவிதை வழங்கியிருந்தார்.
பாலா அண்ணருக்கான நினைவுரையை தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஊடகத்துறையில் தன்னை இணைத்து செயல்பட்டுவரும் ஊடகவியலாளர் பராபிரபா அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டு பாலா அண்ணரின் விடுதலைத்தாகத்தை சுமந்தவர்களாகச் சென்றிருந்தார்கள்.

IMG_2574 IMG_2580 IMG_2586 IMG_2607IMG_2642

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here