யாழில் காவல்துறை பாராமுகம்: கொள்ளையர் கைவரிசை அதிகரிப்பு; மக்கள் அச்சத்தில்!

0
43

யாழில் கொள்ளையர்களின் கைவரிசை அண்மையில் அதிரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்கு திட்டமிட்டே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதாகவும்= இதற்கு சிறிலங்கா காவல்

யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீற்றால் கூரையிடப்பட்டிந்த வீட்டில் கூரையில் ஏறி சீற்றை உடைத்தே கொள்ளையர்கள் கீழே இறங்கி மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தனிமையில் இருக்கும் வயதானவர்களையும் பெண்களையும் கொள்ளையர்கள் தற்போது குறி வைத்து வருகின்றார்கள். குறித்த வீட்டில் மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டிலும் இன்னொருவர் கோண்டாவில் பகுதியிலும் வசித்து வந்துள்ளார்கள். மூதாட்டி தனிமையில் இருக்க விரும்பியதாலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வயதானவர்கள் தமது பாதுகாப்புக்காக பிள்ளைகளுடனோ அல்லது வேறு பாதுகாவலர்களுடனோ தங்குவது மிகவும் பாதுகாப்பானது.

இவ்வாறே, யாழ் ஏ9 வீதியையும் நாவலர் வீதியையும் இணைக்கும் கச்சேரிக்கு அருகாமையால் செல்லும் புறுாடி வீதியில் நள்ளிரவு நேரம் வீடு புகுந்து தொடர்ச்சியாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக காவல்துறையினருக்கு முறையிட்டாலும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். 3 மாதங்களுக்குள் ஒரே வீட்டில் இருதடவைகளுக்கு மேல் நள்ளிரவு கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சிசிரிவி காணொளிகள் பொருத்தினாலும் குறித்த காணொளிகளின் இணைப்பு கம்பிகளை அறுத்து தொடர்பை துண்டித்த பின்னர் கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள். குறித்த வீடுகளில் இலட்சக்கணக்கான பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குறித்த கொள்ளையர்களின் தொடர் செயற்பாட்டைப் பார்க்கும் போது ஒரு சில காவல்துறையினருக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் தொடர்புகள் பேணப்படுகின்றதாக சந்தேகம் தோன்றுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here