பிரான்சில் 3 தினங்கள் இடம்பெறவுள்ள தமிழ் புலன்மொழி வளத்தேர்வு – 2024

0
99

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு நடாத்தும் தமிழ் புலன்மொழி வளத்தேர்வு எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான கருத்தமர்வு நேற்று (28.04 .2024 ) ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் நகரில் இடம்பெற்றது.

இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,லியோன்,போர்தோ1, போர்தோ2, நெவர்) மொத்தம் 5 ஆயிரத்து 559 மாணவர்கள் வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ்12 வரை தேர்வுக்குத் தோற்றவுள்ளதுடன் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றவுள்ளனர்.

வரும் 04.05.2024 சனிக்கிழமை மறுநாள் 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை எதிர்வரும் 12.05.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெறவுள்ளதாகவும்

தமிழ்மொழி எழுத்துத் தேர்வு வரும் 01.06.2024 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு = ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here