வட்டுக்கோட்டைப் பொலிஸ் படுகொலைக்கு எதிராக மக்கள் கண்டனப் போராட்டம் !

0
121

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸிற்கு நீதி கோரி கண்டனப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற இந்தப் போராட்டமானது இன்றைய தினம் (03) மாலை 03 மணியளவில் வட்டுக்கோட்டைச் சந்தியில் ஆரம்பமாகியது.

உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பித்த இந்தப் போராட்டத்தின் போது வட்டுக்கோட்டை   பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் சிங்கள பொலிசார்  குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here